முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் தொல்லை - சென்னை காவல்நிலையத்தில் புகார்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் தொல்லை - சென்னை காவல்நிலையத்தில் புகார்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகள் தனக்கு சிலர் தொடர்ச்சியாக செல்போனில் தொல்லை தருவதாகக் கூறி சென்னை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தொலைபேசியில் சிலர் தன்னிடம் ஆபாசமாக பேசுவதாக சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரின் மகள் புகாரளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் வி.பி.சிங்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவரும் இரண்டு முறை காஷ்மீரின் முதலமைச்சராகவும் இருந்தவர் மறைந்த முஃப்தி முகமது சையத். இவரது மகள்களில் ஒருவரான ரூபையா சயித் சென்னையில் வசித்து வருகிறார். இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Also read: தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் - ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருச்சி ELFIN நிறுவனத்திற்கு சீல்

அதில், இரண்டு செல்போன் எண்கள் மற்றும் ஒரு லேண்ட்லைன் எண்ணிலிருந்து சிலர் தன்னை தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுவதாக தெரிவித்துள்ளார். வி.பி.சிங் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக முஃப்தி முகமது சையத் இருந்தபோது பயங்கரவாதிகளால் ரூபையா கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Police complaint