Jallikattu: பொங்கல் முடிந்த பிறகும் களைகட்டும் ஜல்லிக்கட்டு..

Youtube Video

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் களைகட்டின.

  • Share this:
    பொங்கல் பண்டிகை முடிவடைந்தபோதும், பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் உறுதி மொழி ஏற்ற பின், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடி வாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் பிற காளைகள் களம் இறக்கப்பட்டன.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 150 காளைகள் பங்கேற்றன. அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், இலக்கை நோக்கி வேகமாக முன்னேறின. அவற்றை தடுத்து நிறுத்த காளையர்களும் போட்டி போட்டனர்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய குளத்துப்பட்டியிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை மிரட்டின.

    மேலும் படிக்க...ரம்மியால் விபரீதம்: கூடைப்பந்து வீரர் செயின் பறிப்பவரான கதை

    இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: