• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் சூடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு: இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை!

மீண்டும் சூடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு: இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

காளைகளின் எண்ணிக்கை, விஐபி காளைகளுக்கு முக்கியத்துவம், மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை குறித்து விழாக் குழுவினரின் சில கோரிக்கைகள் தொடர்பாக 4-ம் கட்டமாக இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் நேரத்தை அதிகப்படுத்துவது குறித்து விழாக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற பல கோரிக்கைகள் குறித்து 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடக்க உள்ளது.

மதுரை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும். 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.

இதுதொடர்பாக. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராசன் தலைமையில், அரசுத் துறைகள் மற்றும் விழா நடத்துவோர் இடையே 2 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நேற்று 3-ம் கட்டமாக பேச்சுவார்த்தை தொடர்ந்தது.  மாடு பிடிப்பது, மாடுபிடி வீரர்கள், காளைகள் எண்ணிக்கை, வாடிவாசல் அமைப்பது, அடிப்படைத் தேவைகள், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் எத்தனைக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

காளைகளின் எண்ணிக்கை, விஐபி காளைகளுக்கு முக்கியத்துவம், மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை குறித்து விழாக் குழுவினரின் சில கோரிக்கைகள் தொடர்பாக 4-ம் கட்டமாக இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்நிலையில், தேசிய விலங்குகள் நலவாரியத் தலைவர் எஸ்பி குப்தா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: