ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

ஜல்லிக்கட்டு காளை திருடர்கள்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளையும் பசுமாடுகளையும் திருடி விற்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளான பரவை, சமயநல்லூர், சோழவந்தான் பகுதிகளில் வளர்த்து வரும் பசு மாடுகளையும், ஜல்லிக்கட்டு காளைகளையும் திருடி விற்றுவந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  மதுரை புறநகர் பகுதிகளில், வீடுகளில் வளர்த்து வரும் பசு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள் தொடர்ந்து திருட்டு போனது. இந்த தொடர்  திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வந்ததால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இந்நிலையில், சரக்கு வாகனம் ஒன்று மாடு ஏற்றி கொண்டு செல்வதை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது,  அந்த வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால்,  சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தினர். இந்த விசாரணையில், மாடுகளை திருடி குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

  மாடுதிருட்டில் ஈடுபட்டு வந்தது லோகேஸ்வரன் (21), அழகர்சாமி (30) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூன்றுபேரை கைது செய்த சமயநல்லூர் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட, 5 பசு மாடுகளை மீட்டனர். மேலும், மாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து மூவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  Published by:Suresh V
  First published: