ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Jallikattu 2023 : ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரம் குறைப்பா? கால்நடைத்துறை விளக்கம்..

Jallikattu 2023 : ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரம் குறைப்பா? கால்நடைத்துறை விளக்கம்..

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu 2023 : ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் குறைப்பு தொடர்பான வதந்திகளுக்கு தமிழ்நாடு கால்நடை துறை விளக்கம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜனவரி 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடு பிடி வீரர், காளை உரிமையாளர் ஆகியோருக்கான ஆன்லைன் முன்பதிவு சேவை ஜனவரி 10ம் துவங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாயிலாக 9699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இவர்களுடைய சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் வைத்திருக்கும் மாடு பிடி வீரர்கள், காளைகள் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 4544 மாடுகளுக்கும், 2001 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6545 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 8,500 நபர்கள் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர்.

இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளுக்கான நேரம் குறைக்கப்பட இருப்பதாகவும், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கால்நடைத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் குறைக்கப்படவில்லை எனவும், வழக்கம்போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

First published:

Tags: Jallikattu, Pongal 2023, Tamil News, Tamilnadu