Home /News /tamil-nadu /

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு; 59 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு; 59 பேர் காயம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu 2022 | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது 59 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 4 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.

    ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்தப் போட்டி நடைபெறும்போது 59 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 17 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கார், பைக் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி


    பார்வையாளராக இருந்த அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் 18 வயது பாலமுருகன் என்பவர் மாடு வெளியேறும் இடத்தில் வேடிக்கை பார்த்தபோது வெளியேறிய காளை மாடு இடது பக்க மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்து சுய நினைவை இழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Jallikattu

    அடுத்த செய்தி