• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெய்பீம் : இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட பார்வதிக்கு வழங்கப்படும் - பாமக பாலு

ஜெய்பீம் : இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட பார்வதிக்கு வழங்கப்படும் - பாமக பாலு

சூர்யா - பாமக பாலு

சூர்யா - பாமக பாலு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு ரூ.5 கோடி இழப்பீடுக்கோரி வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

  • Share this:
    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகியுள்ளது. ந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதில் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள வழக்கறிஞர் நோட்டீஸுக்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படம் தொடர்பாக கேட்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை இந்த விவகாரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதி மற்றும் அவரது வாரிசுகள் பயன்பெறும் வகையில் வழங்கப்படும். வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியது தனிநபரின் செயல் அல்ல. இது தெரியாமல் செய்யப்பட்ட ஒன்று அல்ல. திட்டமிட்டு வன்னியர்கள் சமூதாயத்தை அவமதிக்கும்படி எடுக்கப்பட்டு ஒன்று என தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: