காவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு! ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு

கோவை திரும்பிய ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Web Desk | news18
Updated: September 18, 2019, 6:06 PM IST
காவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு! ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு
ஜக்கி வாசுதேவ்
Web Desk | news18
Updated: September 18, 2019, 6:06 PM IST
காவிரி கூக்குரல் இயக்கம் குறித்து தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக கூட்டம் நடத்த உள்ளதாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

காவிரி கரையோரம் 242 கோடி மரங்களை நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவிரி கூக்குரல் பேரணியை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டார். பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கோவை திரும்பிய ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜக்கி வாசுதேவ், இருசக்கர வாகன பயணத்தின் போது தமிழக சாலைகள், கலிபோர்னியா நாட்டின் சாலைகள் போன்று இருந்ததைப் பார்க்க முடிந்தது. காவிரி டெல்டா பகுதியிலுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாக கூட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறினார்.


Also see:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...