சாதி , மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போடாதீர்கள் - ஜக்கி வாசுதேவ்

”நான் அமெரிக்காவில் இருந்தாலும் ஓட்டு போட இந்தியா வருகிறேன் என்றால் இது மிக முக்கியப் பொறுப்பாகக் கருதுகிறேன்.”

சாதி , மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போடாதீர்கள் - ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
  • News18
  • Last Updated: April 17, 2019, 12:33 PM IST
  • Share this:
 அமெரிக்காவில் இருக்கும் ஜக்கி வாசுதேவ் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டுப் போடவேண்டாம். யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

நாளை (ஏப்ரல் 18 ) தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஜக்கி வாசுதேவ்,  நம் நாடுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. அதைச் சரியாகக் கடைபிடிப்பது நம் கடமை என அறிக்கை வெளியிட்டுள்ளர்.


மேலும் அதில் “ நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும் தேர்தல் நாளான 18 தேதி ( நாளை ) ஒரே ஒரு நாள் மட்டும் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்துவிட்டு மீண்டும் உடனே திரும்ப வேண்டியுள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்குக் காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒருவர் விடாமல் உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டுப் போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், சாதி, மதம் , பணத்தை நோக்கமாக வைத்தும் ஓட்டுப் போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன் “ என ஜக்கி வாசுதேவ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : வெகு விமர்சையாக நடந்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்