திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை

  • News18 Tamil
  • Last Updated: September 12, 2020, 2:30 PM IST
  • Share this:
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் இருவர் பெயரிலும் ஆர்.பி.ஐ அனுமதி வாங்கமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இதையடுத்து விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்த வழக்கில் அமலாக்கத்துறை ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்த நடவடிக்கை நேற்றிரவு முதல் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
First published: September 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading