விசைத்தறி இயக்கி நெசவாளர்களிடம் பிரச்சாரம் செய்த ஜெகத்ரட்சகன் மகள்

விசைத்தறி இயக்கி நெசவாளர்களிடம் பிரச்சாரம் செய்த ஜெகத்ரட்சகன் மகள்

ஜெகத்ரட்சகன் மகள் நிஷா

திருத்தணியில் நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக நெசவாளர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

 • Share this:
  திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சந்திரனை ஆதரித்து,  திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மகள் நிஷா விசைத்தறி இயக்கி நெசவாளர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

  திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திருத்தணி எஸ். சந்திரனை ஆதரித்து மாவட்ட கழக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமையில்    அம்மையார்குப்பம், ஆதிவராகபுரம், அம்மனேரி, கொண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில்  அரக்கோணம் நாடாளுமன்ற  உறுப்பினர் திமுக  எஸ்.ஜெகத்ரட்சகன் மகள் நிஷா வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  அவருக்கு கிராம மக்கள், குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்தும், உற்சாகமாக வரவேற்றனர். பிரச்சார கூட்டத்தில் நிஷா பேசுகையில்,  முருகனின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்படும் என்றும்  நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக நெசவாளர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

  எனது தந்தை ஜெகத்ரட்சகன் மீது இத்தொகுதி மக்கள் காட்டும்  அன்பைப் போல், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சந்திரன்  அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும்  அன்பை காட்டி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

  Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

   

  அத்தடன், நெசவாளர்களிடம் திமுக தேர்தல் வாக்குறுதிகள் எடுத்துக் கூறி விசைத்தறிஇயக்கி நெசவாளர்கள் இடம் வாக்கு சேகரித்தார்.

  - திருத்தணி செய்திளார், சசிகுமார்
  Published by:Suresh V
  First published: