• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர்  (கோப்புப்படம்)

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் (கோப்புப்படம்)

  • Last Updated :
  • Share this:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 5 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசுவது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

அரசு உழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் : உடனுக்குடன் அப்டேட்ஸுக்கு கிளிக் செய்க

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: