ஜனவரி 22-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ

வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: January 11, 2019, 11:37 PM IST
ஜனவரி 22-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ
வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
Web Desk | news18
Updated: January 11, 2019, 11:37 PM IST
ஜனவரி 22ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது.

பின்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த ஆசிரியர்கள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை வாபஸ் பெறுவதாக கூறினர். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டதால், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

also see:

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...