ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூஸ்18க்கு பேட்டியளித்த ஜெ. தீபா, ஜெயலலிதா சொத்துக்கள் குறித்த நீதிமன்றம் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாம் நிலை வாரிசுகள் என்று ஏற்றதற்கு மகிழ்ச்சி என்றும் சொத்துக்களுக்கு டிரஸ்ட் அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தீபா, ஜெயலலிதாவின் நிறைய சொத்துக்கள் சசிகலா அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க கூடும் என தெரிவித்தார். ஆனால் சசிகலா அவர்களின் கட்டுப்பாட்டில் சொத்துக்கள் இருக்கிறது என்று எங்கள் தரப்பில் இதுவரை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், வாரிசுகள் நாங்கள் இருக்கிறோம் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும் என தான் முயற்சி மேற்கொண்டோம்.
தற்போது நீதிமன்றம் எங்களை வாரிசாக அறிவித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வழக்கில் சம்பந்தம் இல்லாத நபர்கள் தலையிட முடியாது. முழுமையான தீர்ப்பு வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூறுகிறேன் என்றும் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:ஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: J Deepa, Jayalalithaa