ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குயின் வெப் தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர்
ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்
இயக்கிய குயின் என்ற இணையதள தொடர் வெளியானது
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Also read... துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வெளியான குயின் இணையதள தொடர் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியுள்ளதாகவும் தெரிவித்தார்
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவின் தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது போல குயின் தொடரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துரைத்தார். இதையடுத்து,வழக்கு விசாரணையை வரும் 22 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: J Deepa, Madras High court, Queen Web Series