அமைச்சர் தா.மோ.அன்பரசன் காலில் விழுந்து அழுதவாறே வேலை கேட்ட பெண்!

அமைச்சர் காலில் விழுந்த பெண்

திடீரென அமைச்சரின் காலில் விழுந்து,  எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன் என அழுதார்.

 • Share this:
  அமைச்சர் தா.மோ.அன்பரசன் காலில் விழுந்து கதறி அழுதவாறே பெண் ஒருவர் வேலை கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

  சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த  மருத்துவ முகாமை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் கண், தோல், நரம்பியல் , சர்க்கரை வியாதி உள்ளிட்ட  அனைத்து விதமான   உடல்  பரிசோதனை செய்து கொண்டனர்.

  Also Read:  யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

  அப்போது அங்கு வந்த கன்னிகாஸ்ரீ (வயது 38) என்ற  பெண் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து,  எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். எனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டுமென்றும் அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து உள்ளதாகவும் அரசு வேலை கேட்டு அனுகினால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். என தெரிவித்தார்.

  ஆதரவற்ற நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் இருக்கும் எனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என கண்ணீர் மல்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். மனுவை பெற்று கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் அப்பெண்ணிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரசு வேலைக்காக  கண்ணீர் மல்க பெண் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுது   வேலை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சோமசுந்தரம், செய்தியாளர் - பூந்தமல்லி
  Published by:Arun
  First published: