முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... மு.க. ஸ்டாலின் அதிரடி பதில்

திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... மு.க. ஸ்டாலின் அதிரடி பதில்

இதுவரை திமுகவின் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுவரை திமுகவின் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுவரை திமுகவின் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றினீர்களா என எதிர் கட்சியினர் கேட்கும் போது, 10 மாத குழந்தையிடம் 10 வது மதிப்பெண் என்ன என கேட்பது போல் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் துறைவாரியான ஏற்றத்தை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

Also Read : திரு.வி.க நகரில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக கடந்த மே 7-ஆம் தேதி பதவி ஏற்று ஒரு சில நிமிடங்களிலேயே ஐந்து முக்கிய கோப்புகள் கையெழுத்திட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டது.

வேளாண்மைக்காக தனியாக இரண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 55,000 மகளிர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து கூடிய தகுதி வாய்ந்த நபர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்குதல்.

மகப்பேறுகால விடுமுறை 9 மாத காலத்தில் இருந்து 12 மாத காலமாகவே ஏற்பட்டுள்ளது.

குடும்ப பாதுகாப்பு உதவித் தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் லிட்டர் மூன்று ரூபாய் விலை குறைப்பு, நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!

மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம், விவசாயிகள் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது என இதுவரை திமுகவின் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் முறையான அரசாணை வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதை அரசு முனைப்புடன் கவனித்து வருகிறது என்று அவர் கூறினார்.

2011-2012 முதல் 2020-2021 வரை கடந்த பத்தாண்டுகளில் தமிழக சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் கடந்த ஆட்சியாளர்களால், வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன என்றார்.

மேலும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து, நிறைவேற்றி வரும் வேளையில் பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல் உள்ளது. இத்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: MK Stalin, TN Assembly