இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார்.

news18
Updated: February 8, 2019, 4:39 PM IST
இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!
ஜெயக்குமார்
news18
Updated: February 8, 2019, 4:39 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல; எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாநில வளர்ச்சியில் மக்களை ஏற்றப்பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது.

தேசிய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி 8.16 சதவீதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலைமையைக் கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது. சென்னையின் வளர்ச்சிக்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு முன்பு இருந்தவர்கள் பண்புள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு,குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

Also watch
Loading...
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...