உரிய அறிவிப்பின்றி ஆந்திர மாநில அரசு, பிச்சாட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரி நீரை திறந்ததால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டார்கள் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் ஆந்திரா அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்மடம் பகுதியில் பழவேற்காடு ஏரியில் படகு மூலம் பயணித்துஆரணி ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதியிலும், பழவேற்காட்டில் வெள்ளநீர் நீர் சூழ்ந்த பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் நாசர், சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரண்டு நாட்களுக்குள் மழை நீர் வடியும் என சொல்லிவிட்டு வருவதல்ல இயற்கை பேரிடர்.
Also read: பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..
உரிய அறிவிப்பின்றி ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 3,000 பேர் 40 முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கி வருவதாகவும்
20 ஆயிரம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று உணவு வழங்கி வருவதாகவும் வெள்ளத்தால் பாதிப்படைந்த தரைப்பால சாலை, பிற சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார்...
Also read: ரூ.52,000 அபேஸ்... மொபைல் தொலைந்து போனால் இப்படியும் ஒரு பிரச்னை இருக்கு..!
பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் கூறுகையில், தமிழகத்தில்
கொரோனா இரண்டாவது அலையை அறுத்தெறிந்த பெருமை தமிழக அரசுக்கு உண்டு. முதலமைச்சரின் உத்தரவில் நன்றி தெரிவிக்கக் கூட தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய தாங்கள் சொந்த தொகுதிகளுக்கு செல்லவில்லை என்றும் நோயை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர் ஆந்திர மாநில அரசு எந்தவித முன்னறிவிப்புமின்றி 18 ஆயிரம் கன அடிக்கு மேல் பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் உபரி நீரைத் திறந்து விட்டதால் தான் இந்த அளவிற்கு மோசமான பாதிப்பு என்றும் இதனால் 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்படைந்து வீடுகளில் உள்ளனர் அவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும் பாதிப்படைந்து 40 தங்கும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள 3000 பேருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்,
செய்தியாளர் - பார்த்தசாரதி, திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Thiruvallur