முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டமன்றத்தில் இபிஎஸ்-க்கு அருகில் ஓபிஎஸ் அமர்வாரா... சபாநாயகர் அப்பாவு அளித்த பதில்..!

சட்டமன்றத்தில் இபிஎஸ்-க்கு அருகில் ஓபிஎஸ் அமர்வாரா... சபாநாயகர் அப்பாவு அளித்த பதில்..!

ஓபிஎஸ், இபிஎஸ்

ஓபிஎஸ், இபிஎஸ்

கடந்த முறை இருக்கையை மாற்ற சபாநாயகர் அனுமதியளிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்றும், ஓ.பி.எஸ்-ன் இருக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இருக்கையை மாற்ற சபாநாயகர் அனுமதியளிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவர் இருக்கையில் யார் அமருவார்கள் என இப்போதே கேள்வி எழ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தென்காசியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,  “பேரவையில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது பேரவைத் தலைவரின் முழு உரிமை என்றார். முன்னதாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த அப்பாவு சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Edappadi Palaniswami, O Panneerselvam, TN Assembly