3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

மாதிரிப் படம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.

 • Share this:
  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி, மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  Published by:Suresh V
  First published: