• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அறநிலையத்துறை!

பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அறநிலையத்துறை!

பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அறநிலையத்துறை!

பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அறநிலையத்துறை!

முன்னாள் அறங்காவலர்கள் சூறையாடி வந்த, பேயாழ்வார் அவதரித்த திருக்கோயிலை முழுமையாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் இத்திருக்கோவிலில்தான் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் தோன்றினார் என்றும் வரலாறு தெரிவிப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று அக்கோவிலை நேரடியாக ஆய்வு செய்த அவர், சுமார் 17 ஆண்டுகளாக கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படாமல் முன்னாள் அறங்காவலர்கள் கோவில் சொத்தை சூறையாடி வந்ததாக தெரிவித்தார்.

Also read: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்

இதுகுறித்து ஏற்கனவே பல்வேறு புகார்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் தெரிவித்திருந்த போதிலும், அது குறித்து கடந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது உடனடியாக அறங்காவலர்களை நீக்கம் செய்து முழுமையாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு ஆதிகேசவபெருமாள் கோவில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் கோவிலின் நகை ஆபரணங்கள், சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும், இன்று காலை நடைபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆலயத்தில்  17 ஆண்டுகளாக எந்த ஆரம்ப கட்ட பணிகளும் நடைபெறவில்லை. எனவே ஆரம்ப பணிகளை துவங்கி ஓராண்டுக்குள் குடமுழுக்கு நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திருகோயில் இந்து சமய அறைநிலையத்துறையின் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல் தொடர்ந்து இக்கோவிலில் அர்ச்சகர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து அப்பணிகளை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை கோரிக்கை வைத்துள்ளனர். அந்த அடிப்படையில் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: