ஐடி ரெய்டில் சிக்கிய வெளிநாட்டு பணம்; நெருக்கடியில் கல்கி சாமியார் குடும்பம்! புதிய தகவல்கள்

சோதனையின் போது வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நில விற்பனையில் கிடைத்த பணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐடி ரெய்டில் சிக்கிய வெளிநாட்டு பணம்; நெருக்கடியில் கல்கி சாமியார் குடும்பம்! புதிய தகவல்கள்
சோதனையின் போது வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நில விற்பனையில் கிடைத்த பணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
  • Share this:
கணக்கில் வராத வெளிநாட்டு பணம் சிக்கியுள்ளதால், கல்கி பகவான் சாமியாரின் குடும்பம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாரான கல்கி பகவான் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் கட்டுக்கட்டாக இந்தியப் பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளாக நடந்துவரும் சோதனையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுவரை வருமானவரித்துறை வரலாற்றில் இல்லாதளவு, கிருஷ்ணாவின் வீட்லிருந்து கணக்கில் வராத 9 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் சிக்கியுள்ளதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வெளிநாட்டு ரொக்கம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு ரொக்கத்தின் பாதை குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.


இரண்டாம் நாள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் 40 கோடி ரூபாயை தாண்டும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கல்கி சாமியாரின் தங்கும் விடுதியிலிருந்து கணக்கில் வராத தங்கம் மற்றும் ரொக்கம் சிக்கியுள்ளது என்று வருமானவரித்துறையினர் கூறியுள்ளனர். சோதனையின் போது வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நில விற்பனையில் கிடைத்த பணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கென்யா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் கல்கி சாமியாரின் மகன் செய்துள்ள முதலீடு தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு புல்ஸ் என்ற பெயரில் கபடி விளையாட்டு குழுவை எடுத்து நடத்தியது குறித்து வருமானவரித்துறை விசாரணை நடந்துவருகிறது.

Also Watch : எஸ்.சி. பிரிவை கூவம் ஆற்றோடு ஒப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்