ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. ரூ. 290 கோடி முறைகேடு அம்பலம்!

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. ரூ. 290 கோடி முறைகேடு அம்பலம்!

கோப்பு படம்

கோப்பு படம்

5 நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகித்த 5 நிறுவனங்கள் ரூ. 290 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்திற்கு பொருட்கள் சப்ளை செய்த 5 நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், போலியான ரசீதுகளை தயாரித்து பல கோடிகளுக்கு விற்பனை நடந்ததுபோல கணக்கு எழுதப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இன்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனம் ரூ. 150 கோடி வருமானத்தை மறைத்ததும், பெஸ்ட் தால் மில் நிறுவனம் ரூ. 80 கோடி வருமானத்தை மறைத்ததும், அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் ரூ. 60 கோடி வருவாயை மறைத்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

மொத்தமாக 5 நிறுவனங்கள் ரூ. 290 கோடி வருமானத்தை மறைத்தது சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: IT Raid, Ration Shop