தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முலமைச்சரும் போடி தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூலில், சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் வீடு துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்யப்படுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பணம், ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், வீட்டு செலவுக்காக வைத்திருந்த பணம் மட்டுமே இருந்ததாகவும் அதனை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதேபோல திமுக பிரமுகர்கர் சிலரின் வீடுகளிலும் வருமான வரிதுறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட 13 ஆவது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர் சித்தரஞ்சன் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Must Read : தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செயய எடுத்துச் சென்றதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bodinayakanur Constituency, IT Raid, O Panneerselvam, TN Assembly Election 2021