முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.கே. நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

எஸ்.பி.கே. நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

IT Raid : நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், 2வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் சோதனை தொடர்கிறது.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகம் மதுரைசாலை ராகவேந்திரா நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்

தங்க நகை எடை போடும் தராசு, பணம் எண்ணும் இயந்திரம் என பல்வேறு உபகரணங்களுடன் விடிய விடிய சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்யாதுரை மகன் கருப்பசாமி உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் எஸ்.பி.கே நிறுவனம் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு சென்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை நடைபெற்ற முதல்நாள் விசாரணை நிறைவுற்ற நிலையில் இன்றும் விசாரணை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.கே நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை அலுவலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்கிளில் இன்றும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Must Read : இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

இதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பரும், நமது அம்மான நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கும் பல்வேறு ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First published:

Tags: Income Tax raid, IT Raid, SP Velumani