• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐடி ரெய்டு: அரசு காண்டிராக்டரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஐடி ரெய்டு: அரசு காண்டிராக்டரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இந்த பெரியசாமி ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரான அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் என கூறப்படும் சுப்ரமணியுடன் சேர்ந்து பல பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் நீதித்துறை கட்டங்களை கட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே பெரியசாமியிடமிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத ரூ.14.54 கோடி பணத்தை  வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் பிஎஸ்கே உரிமையாளர் வீடு, அலுவலகம், நூல் மில், கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடைப்பெற்றது.

மேலும் பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக் குமார் ஆகியோர் நிர்வகிக்கும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மற்றும் சரண்யா மில் ஆகிய இடங்களிலும் சோதனை நடைப்பெற்றது.

இந்த பெரியசாமி ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரான அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் என கூறப்படும் சுப்ரமணியுடன் சேர்ந்து பல பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் நீதித்துறை கட்டங்களை கட்டியுள்ளார்.

ஏற்கனவே வீடுகளில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சோதனை நடைபெற்றது. அதன் பிறகு அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழக்கு CBCID விசாரணையில் நிலுவையில் உள்ளது. அவரது நண்பராகவும் பங்குதாரராகவும் பெரியசாமி இருந்து வருவது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: