ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரபல புரபஷனல் கொரியருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை..!

பிரபல புரபஷனல் கொரியருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை..!

புரபஷனல் கொரியருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

புரபஷனல் கொரியருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

IT raid in Professional Courier | தமிழ்நாட்டில் புரபஷனல் கொரியருக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பிரபல கொரியர் நிறுவனமான, புரபஷனல் கொரியர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, அந்நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள கொரியர் அலுவலகத்திலும், ஆழ்வார்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையில் உள்ள புரபஷனல் கொரியர் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. வருமான வரி சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன்  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேப்போன்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டுச்சேலை விற்பனை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியேற்றினர். இதேபோல், வீடு, கடை என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சோதனை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியதால் அதிகாரிகளுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

First published:

Tags: Income Tax raid