திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை

திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை

கோப்புப் படம்

திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற திமுக உறுப்பினர் சி.என். அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து அவருக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் சி.என். அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து அவருக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

  சி.என். அண்ணாதுரை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.என். அண்ணாதுரைக்கு சொந்தமான கிராமமான தேவனாம்பட்டில் உள்ள அவரது வீட்டில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப் பட்டதாக கூறப்படுகின்றது.

  அங்கே, பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்ததாகக்கூறி, அதன் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

  இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து அண்ணாதுரைக்கு சொந்தமான வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன், திமுக கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

  Must Read : மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தேன்... நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்கிறேன் - பிரதமர் மோடி

   

  இந்நிலையில், தன் மகள் செந்தாமரை வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘இதற்கு ஒருபோதும் திமுகவினர் பயப்படமாட்டோம். நாங்க பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் நான் கலைஞரின் மகன்’ எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: