முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

செந்தில் பாலாஜி - மு.க.ஸ்டாலின்

செந்தில் பாலாஜி - மு.க.ஸ்டாலின்

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்படி, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூரில் உள்ள வீடு மற்றும் அவரின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீடு என 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் சபரீசனின் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகினற்னர்.

இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருமான வரித்துறை அதிகாரிகள் எனது மகள் செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதற்கு ஒருபோதும் திமுகவினர் பயப்படமாட்டோம். நாங்க பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் நான் கலைஞரின் மகன் எனவும் கூறியிருந்தார்.

Must Read : மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரி சோதனை

இந்நிலையில், இந்த  வருமானவரி சோதனையைக் கண்டித்து அங்காங்கே திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந் வருமானவரி சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: DMK, IT Raid, Karur Constituency, Senthil Balaji, TN Assembly Election 2021