தமிழக அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 7 இடங்களில் ஐ.டி ரெய்டு...!

வங்கி கணக்கு மூலம் வாக்காளர்களுக்கு பைனான்சியர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Web Desk | news18
Updated: April 12, 2019, 12:24 PM IST
தமிழக அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 7 இடங்களில் ஐ.டி ரெய்டு...!
நாமக்கல் ஐடி ரெய்டு
Web Desk | news18
Updated: April 12, 2019, 12:24 PM IST
சென்னை உள்ளிட்ட தமிழக அளவில் அரசு ஒப்பந்த கட்டிட நிறுவனமான பிஎஸ்கே குருப் ஆப் கம்பெனியில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் பிஎஸ்கே உரிமையாளர் பெரியசாமி வீடு, அலுவலகம், நூல் மில் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

மேலும் பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக் குமார் ஆகியோர் நிர்வகிக்கும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மற்றும் சரண்யா மில் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

மேலும் அவரது பண்ணை வீடு, சேலம் சாலையில் உள்ள அலுவலகம், மோகனூர் சாலையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகின்றன.

இந்த பெரியசாமி ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரான அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் என கூறப்படும் சுப்ரமணியுடன் சேர்ந்து பல பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் நீதித்துறை கட்டங்களை கட்டியுள்ளார்.

ஏற்கனவே வீடுகளில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சோதனை நடைபெற்றது. அதன் பிறகு அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு CBCID விசாரணையில் நிலுவையில் உள்ளது. அவரது நண்பராகவும் பங்குதாரராகவும் பெரியசாமி இருந்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் வங்கி கணக்கு மூலம் வாக்காளர்களுக்கு பைனான்சியர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Also see... ஐபிஎல் : மும்பை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி


Also see... #RRVCSK | வெற்றிக் கணக்கில் சதமடித்த கேப்டன் தோனி...!


Also See...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...