கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 3ஆவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

காருண்யா பல்கலைகழகம்

கோவையில் பால் தினகரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

 • Share this:
  பலத்த பாதுகாப்புடன், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

  தமிழகம் முழுவதும் ஏசு அழைக்கிறார் அறக்கட்டளை, காருண்யா பல்கலைக்கழக நிறுவனர் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜபக்கூடங்கள், பல்கலைக்கழகம், உள்ளிட்ட பகுதிகளில் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க... சசிகலாவுக்கு கொரோனா தொற்று

  இந்நிலையில் கோவையில் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் துவங்கிய சோதனையானது, மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

  இதனால் காருண்யா பல்கலைக்கழகத்தை சுற்றி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏசு அழைக்கிறார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டுவரும் சோதனையில் பல்வேறு ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: