Home /News /tamil-nadu /

ஆர்ஆர்பி தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில்‌ மையங்களை ஏற்படுத்துவது நியாயமற்றது.. சு.வெங்கடேசன்‌ எம்‌.பி

ஆர்ஆர்பி தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில்‌ மையங்களை ஏற்படுத்துவது நியாயமற்றது.. சு.வெங்கடேசன்‌ எம்‌.பி

சென்னை ரயில்வே வாரிய தேர்வினைதமிழகத்திலேயே நடத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ரயில்வே வாரிய தேர்வினைதமிழகத்திலேயே நடத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ரயில்வே வாரிய தேர்வினைதமிழகத்திலேயே நடத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

    ரயில்வே பணியாளர் வாரியம் நடத்தும் NTPC தேர்வு வரும் மே 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தேர்வர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

    கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ஆர்.ஆர்.பி நடத்தும் NTPC மற்றும் குரூப் D தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 649 பணியிடங்களுக்கு ஒட்டுமொத்தமாக நாடு முழுவதில் இருந்தும் 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

    இதில், தமிழகத்திலிருந்து 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதன் முதல்நிலை கணினி வழித் தேர்வு 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பதவிக்குமான இரண்டாம் நிலை தேர்வுக்கு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் தான், வரும் மே 9 ஆம் தேதி Station master பதவிக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கு தேர்வான தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைய உள்ள நகரம் மற்றும் தேர்வு தெரிவிக்கும் தகவல்கள் பகிரப்பட்டது. அதில், நாமக்கல்லில் இருந்து சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு, கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், மற்றொரு கோவை மாணவருக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமணமான மூன்றே நாளில் மணமகன் வீட்டில் போட்ட நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுமணப்பெண்!

    புதுச்சேரி மாணவருக்கு கேரளாவின் கோட்டயத்திலும், ஈரோடு மாணவிக்கு ஆந்திராவின் நெல்லூரிலும் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இதேபோன்று ஹரியானா மாணவருக்கு திருச்சி உள்ளிட்ட வேறு மாநில மையங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதுபோன்று தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படுவதை ரயில்வே பணியாளர் வாரியம் நினைத்தால் முறைப்படுத்த முடியும் என மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    மேலும், வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் போது, பல வகைகளில் மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள்.

    இந்நிலையில், சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என சு.வெங்கடேசன்‌ எம்‌.பி வலியுறுத்தியுள்ளார்.



    இதுதொடர்பாக சு.வெங்கடேசன்‌ எம்‌.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்‌ஆர்பி சென்னை 601 ரயில்‌ நிலைய அதிகாரி காலியிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும்‌ 2021 ஜூலைக்கும்‌ இடையே முதல்நிலைத்‌ தேர்வு நடத்தியது. இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்திலேயே உள்ள நகரங்களில்‌ நடத்தப்பட்டது.

    இதற்கான முடிவுகள்‌ மார்ச்‌ 22க்கும்‌ ஏப்ரல்‌ 22க்கும்‌ இடையே வெளியிடப்பட்டன. தேர்வானவர்களுக்கு இரண்டாம்‌ நிலை தேர்வு நடத்தப்பட வேண்டும்‌. இந்த தேர்வு தெற்கு ரயில்வேயில்‌ சென்னை ஆர்‌ஆர்‌பிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள்‌ வைப்பதுதான்‌ நியாயமானதும்‌ வசதியானதுமாகும்‌.

    ஆனால்‌ ஜம்மு-காஷ்மீரில்‌ உள்ள சம்பாவிலும்‌, அலகாபாதிலும்‌, மைசூரு உடுப்பி சிமோகாவிலும்‌ தேர்வு மையங்கள்‌ வைக்கப்பட்டுள்ளன. மே 9ம்‌ தேதி தேர்வு நிச்சயிக்கப்பட்டுள்ளது . சிஇஎன்‌1/ 2019 என்ற விளம்பரத்தின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பித்த இந்த தேர்வர்களுக்கு இப்படி வெளிமாநிலங்களில்‌ மையங்களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும்‌ இடங்களில்‌ தமிழக விண்ணப்பதாரர்கள்‌ திணற வைப்பதற்கு வழிவகுக்கும்‌. மாற்றுதிறனாளியான ஒரு விண்ணப்பதாரருக்கு அலகாபாத்‌ மையம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தும்‌ ஜனநாயக
    பூர்வமற்றது மட்டுமல்ல நியாயமானதும்‌ இல்லை. தேர்வர்களுக்கு எதிரான புறக்காரணியாக தேர்வு நடைமுறைகள்‌ அமையக்கூடாது.

    இது குறித்து சென்னை ஆர்‌ஆர்பி தலைவர்‌ அழகர் ஜெகதீசனுக்கு நான்‌ கடிதம்‌ எழுதியுள்ளேன்‌. அவரை இதில்‌ தலையிட்டு இந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்குமாறும்‌ ஏற்பாடு செய்யுமாறும்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளேன்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Indian Railways, Su venkatesan

    அடுத்த செய்தி