திமுக நீட் தேர்வை ரத்துசெய்வதாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - அண்ணாமலை

திமுக நீட் தேர்வை ரத்துசெய்வதாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - அண்ணாமலை

அண்ணாமலை

நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Share this:
பாரதிய ஜனதா கட்சியின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்கவேண்டும். அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.

Also read: நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

அவர் மேலும் கூறுகையில், மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இது அரசியல் பேசும் நேரம் இல்லை. மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. 4 ஆண்டுகள் கழித்து நீட் சம்பந்தமாக தற்போது பேசுகிறோம். வருடா வருடம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நீட் மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாகச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.இந்த நீட் தேர்வு நடந்த பிறகு உட்காந்து பேசலாம். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எங்கு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். கல்வி வணிகமாக மாறியதை உடைக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
Published by:Rizwan
First published: