IT IS TIME WE INTROSPECT IDEATE CONSULT ACT KARTI P CHIDAMBARAM RIZ
’காங்கிரஸ் செயல்படவேண்டிய தருணம் இது’ - கபில் சிபலின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு
கார்த்தி சிதம்பரம்
கபில் சிபலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கார்த்திக் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பீகார் தேர்தல் தொடர்பாக தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
மேலும், உத்தரபிரதேசம், குஜராத் மாநில இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை என்று சாடிய அவர், பிரச்னைகளுக்குத் தீர்வுகள் தெரிந்தும் காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் அதனைச் செய்வதில்லை என்றும் கபில் சிபல் விமர்சித்தார்.
இடைத்தேர்தல் என்று வரும்போது காங்கிரஸை நாட்டு மக்கள் பயனுள்ள மாற்றுச் சக்தியாக கருதவில்லை என்ற கபில் சிபலின் கருத்தை அடுத்து, காங்கிரஸ் சுய விசாரணை செய்யவேண்டிய, செயல்படவேண்டிய தருணம் இது என்று அக்கட்சி எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கபில் சிபலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.