பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்: தினேஷ் குண்டுராவ்

பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்: தினேஷ் குண்டுராவ்

மேகதாது விவகாரத்தில் அந்தந்த மாநிலம் அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருவதாகவும், இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளார் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக காங்கிரஸின் எதிர்கால செயல் திட்டம் குறித்து இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இரண்டாம் நாள் கூட்டத்தில் மாநில செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனை நடைபெற்றது.

இதில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரின்  கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதில், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாவது, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல் சூழ்நிலை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Also read: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

கூட்டத்திற்கு பின் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை, என்.ராம், சசிகுமார் அணுகி உள்ளனர். இவ்விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். வெளிநாடுகளில் கூட இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்க கூடிய நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

தீவிரவாதிகளை ஒட்டுக் கேட்கும் கருவிகள் மூலம் சொந்த நாட்டில், சொந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விவகாரத்தில், நேரடியாக மோடி அமித்ஷா தலையீடு இருப்பது தெரியவந்துள்ளது. இது வெட்கக்கேடானது என்றார்.

பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் கூட எதிர்க்கட்சிகளின் குரலை கேட்டது. ஆனால், மோடி அரசு மோடி  தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

அதேபோல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

மேகதாது விவகாரத்தில் அந்தந்த மாநிலம் அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசாம் முதல்வர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, அசாம் மற்றும் மிசோரமில் போர் மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இரு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் வருவதாலும், அமித்ஷா நேரடியாக தலையிட்டு சுமூகமாக முடிக்க வேண்டுன். ஆனால் தவறிவிட்டார் என்றார்.
Published by:Esakki Raja
First published: