Home /News /tamil-nadu /

Omicron : நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று?

Omicron : நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று?

மாதிரி படம்

மாதிரி படம்

ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு நேரடியாக வராமல் வேறு நாடுகள் வழியாகவும் பயணித்து வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி மாதிரிகள் எடுக்கப்படும்.

  • News18
  • Last Updated :
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக 10ம் தேதி சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

நைஜீரியா non risk கொரோனா ஆபத்தில்லா நாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்படாது. பயணிகளில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு நேரடியாக வராமல் வேறு நாடுகள் வழியாகவும் பயணித்து வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி மாதிரிகள் எடுக்கப்படும்.

அப்படி 10ம் தேதி இந்த நபரின் மாதிரி சென்னை விமான நிலையத்த்தில் எடுக்கப்பட்டது. அவர் ஆபத்தில்லா நாட்டிலிருந்து வந்ததால் முடிவுகள் வரும் வரை விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மாதிரி எடுக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

மூன்று மணி நேரத்தில் முடிவுகள் வந்துள்ளன. அவருக்கு கொரோனா பாசிடிவ் என்று தெரிந்தவுடன் அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருடன் தொடர்பில் இருந்த ஆறு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு நெகடிவ் என வந்தது.

Also read... ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டிசம்பர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்கு அறிகுறிகள் தென்படவே மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்கள் ஏழு பேருக்கும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்த போது அதில் S gene drop கண்டறியப்பட்டது. S gene drop என்றால் இது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகள் அல்லாமல் வேறு கொரோனாவாகா இருக்கலாம் என்று அர்த்தம். எனவே இந்த ஏழு பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் நாளை தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7 பேரில் 2 ஆண்கள் 5 பெண்கள் உள்ளனர். 3 மணி நேரத்தில் 6 பேருக்கு தோற்று பரவி உள்ளதால் இது உண்மைதான் பாதிப்பாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Omicron

அடுத்த செய்தி