முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நான் போகாத ஜெயிலே இல்லை.. இன்னும் என்னை காதலிக்கிறார்கள்..” வரிச்சியூர் செல்வம்..!

“நான் போகாத ஜெயிலே இல்லை.. இன்னும் என்னை காதலிக்கிறார்கள்..” வரிச்சியூர் செல்வம்..!

வரிச்சியூர் செல்வம்

வரிச்சியூர் செல்வம்

பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா தன்னை ரவுடி என்று அழைத்தது வருத்தமாக இருப்பதாக வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் வரிச்சியூர் செல்வம், தனக்கும்- சூர்யா சிவாவுக்கும் இடையேயான ஆடியோ பஞ்சாயத்து குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். யாருக்கோ சவால் விடுவது போல், கம்பீரமாக காட்சியளித்த வரிச்சியூர் செல்வம், தன்னை ரவுடி என்று சொல்வது கஷ்டமாக இருப்பதாக கூறினார். தான் போகாத ஜெயில்களே இல்லை என்றும் இந்தியாவில் 4 மாநில ஜெயில்களில் இருந்துள்ளதாகவும் கம்பீரமாக பேசத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் தான் ஒரு மலை என்றும் கழுகு எனவும் வீர வசனங்களை அவிழ்த்துவிட்டார். ஆறு என்கவுன்டரில் தப்பிய தன்னை, இப்போதும் சிலர் காதலித்து வருவதாக தனது நினைவுகளை பகிர்ந்தார். சினிமாவில் நடிக்க ஆசையில்லாத தான், படம் ஒன்றை தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

First published: