கமலுடன் இணைவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியலில் நடிகர் ரஜினிகாந்தும் கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அன்மையில் தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் ஒருசேர ஒரே கருத்தை தெரிவித்தனர். தேவை ஏற்பட்டால் நிச்சயம் அரசியலில் ஒன்றிணைவோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து ரஜினியும் கமலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
Also see... சிவப்பு புடவையில் ரம்யா நம்பீசன்... இணையத்தைக் கலக்கும் போட்டோஸ்!
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ரஜினியின் வீட்டில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கமலுடன் இணைவது குறித்து ரஜினி கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மாவட்ட செயலாளர்களுடைய மனநிலையை தெரிந்து கொண்டபின் ரஜினி வருங்காலத்தில் அரசியலில் கமலுடன் இணைந்து பணியாற்றுவாரா என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also see...