சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள மஞ்சப்பை வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை துவக்கி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியபோது, 1907-ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தபோது உலகமே வரவேற்றதாகவும், 115 ஆண்டுகளுக்கு பிறகு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
Also see... 14ம் தேதிவரை இப்படிதான்... மிக கனமழைக்கும் வாய்ப்பு - வெதர்மேன்
நீர்நிலை, சுற்றுச்சூழல், வனம், கடல் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் மாசடைந்து, உலகமே பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டதாகவும், கால்நடைகள் கூட பிளாஸ்டிக்கை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புற்றுநோயை உருவாக்கும் பிளாஸ்டிக் கவரில் கொதிக்கும் சாம்பார் மற்றும் டீ வாங்குவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்த சிக்கிம் அரசு கடந்த 1998 ஆம் ஆண்டே அதற்கு தடை விதித்துள்ளதாகவும் இங்கிலாந்து, எத்தியோப்பியா உகாண்டா போன்ற நாடுகளை போல நாமும் பேரழிவை தரும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற வளாகமும் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, D Raja, Judge, Plastic Ban, Plastic pollution