Home /News /tamil-nadu /

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மீறினால் அபராதம்.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மீறினால் அபராதம்.. தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரேநாளில் 1500-ஐ  எட்டியுள்ளது.

    பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துளது.

    தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரேநாளில் 1500-ஐ  எட்டியுள்ளது.

    இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்து வருகின்றது.

    இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Mask

    அடுத்த செய்தி