Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.. வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.. வானிலை மையம்

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியின் சில இடங்களில் 2 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக் கூடும்.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும்.

     மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

    06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Also Read: மெரினா கடல்அலையில் சிக்கி ஆந்திர இளைஞர் மாயம்.. தேடும்போது மற்றொரு இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்


    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    09.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Rain Forecast

    அடுத்த செய்தி