• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுவந்தியை ட்ரோல் செய்வது அநாகரீகம் - மனநல மருத்துவர் ஷாலினி!

மதுவந்தியை ட்ரோல் செய்வது அநாகரீகம் - மனநல மருத்துவர் ஷாலினி!

மதுவந்தி

மதுவந்தி

மதுவந்திக்கு பணக்கஷ்டம் என்றதும், இது தான் சமயம் என்று அவரை பரிகாசமாய் ட்ரோல் செய்வது அநாகரீகம். இது முற்றிலும் மனிதாபிமானம் அற்றது என்று ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    மதுவந்திக்கு பணக்கஷ்டம் என்றதும், இது தான் சமயம் என்று அவரை பரிகாசமாய் ட்ரோல் செய்வது அநாகரீகம் என்று மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீடு வாங்குவதற்காக மதுவந்தி தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

    அதனை திருப்பி செலுத்ததை தொடர்ந்து மதுவந்தியின் வீட்டுக்கு நிதி நிறுவன ஊழியர்கள் சீல் வைத்தனர்.  இது தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் மதுவந்தி இடையே நிகழ்ந்த உரையாடலின் வீடியோ வெளியானது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த வீடியோவை வைத்து  மதுவந்தியை பலரும் தனி மனித விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இத்தகைய விமர்சனம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மனநல மருத்துவர் ஷாலினி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக  ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திருமதி மதுவந்தி  ஒரு தனிப்பெண். ஒற்றை பெற்றோர். இதற்கு முன் அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தற்பெருமை பேசியது, சவடால் அடித்தது, அலப்பறை செய்தது என்பன எல்லாமும் நமக்கு கடுப்பேற்றினாலும், அவை எல்லாமே முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே.

    இதையும் படிங்க: "என்ன கால் மட்டும் தான் இருக்கு?" - நடுரோட்டில் சரக்கு வாகனத்தை நிறுத்தி போதையில் படுத்துறங்கிய இளைஞரால் பரபரப்பு


    இப்போது அவருக்கு ஓர் இன்னல், பணக்கஷ்டம் என்றதும், இது தான் சமயம் என்று அவரை பரிகாசமாய் ட்ரோல் செய்வது அநாகரீகம்.
    இது முற்றிலும் மனிதாபிமானம் அற்றது. அவருக்கும் அவர் வங்கிக்காரர்களுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எப்படி வெளியே கசிந்தது?

    மருத்துவர் ஷாலினி


    தன் சொந்த சித்தப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூட உதவிக்கேட்க மாட்டாமல், தனியாக கைக்கூப்பி நிற்கும் ஒரு பெண்ணின் துயரை பரிகாசம் செய்வதா தமிழ் பண்பு?அவரை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்.

    Rosa Parks கேட்டது போல், "Ain't she a woman?"

    துன்பத்தில் இருக்கும் பெண்ணை மேலும் துன்புறுத்துவதா நம் பண்பாடு” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் படிக்க: தசரா : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: