ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது சாத்தியமில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது சாத்தியமில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது - உயர் நீதிமன்ற மதுரை கிளை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவியின் தாய், உயர்நீதிமன்ற  மதுரை கிளையில்  ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,  தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும் ஆன்லைன் விளையாட்டின்போது ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு தனது மகள் சென்றுவிட்டார், எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.   அப்போது நீதிபதிகள், இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது . தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ” என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Addicted to Online Game, Madurai High Court