“நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சிதான்’: அதிமுகவை பாராட்டியும், விமர்சித்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

“நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சிதான்’: அதிமுகவை பாராட்டியும், விமர்சித்தும் பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

விஜயகாந்த்

118 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கல்வெட்டையும் திறந்துவைத்தார். அப்பொழுது தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகங்களை வழங்கினர்.

  • Share this:
நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சிதான் ஆளும் கட்சியின் ஆட்சி என அதிமுகவை பாராட்டியும், விமர்சித்தும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட செங்கன்மால் பகுதியில் தேமுதிகவின் புதிதாக அமைக்கப்பட்ட 118 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா, ஒன்றிய செயலாளர் கராத்தே.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு கேளம்பாக்கத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை அங்கிருந்து திருப்போரூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிநெடுகிலும் தேமுதிக தொண்டர்கள் மேளதாளத்துடன் கட்சிக் கொட்டி ஏந்திய இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

118 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா கல்வெட்டையும் திறந்துவைத்தார். அப்பொழுது தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, மூன்றாம் அணி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இல்லாத ஒன்றை கேட்கக் கூடாது. பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் நாட்கள் உள்ளன. செயற்குழு, பொதுக்குழுவிற்கு முன்னர் தெளிவான ஒரு அறிவிப்பு தருகிறோம்.

நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சிதான் ஆளும் கட்சியின் ஆட்சி. விவசாய கடன் தள்ளுபடி, முன்முனை மின்சாரம், கொரோனா நிதிஉதவி போன்றவற்றை சிறப்பாக செய்துள்ளனர். இன்னும் செய்யாமல் உள்ளதையும் செய்ய வேண்டும் என பிரேமலதா ஆளும் கட்சியை பாராட்டியும் விமர்சித்தும் பேசினார்.

ஜெயம்கொண்டத்தில் பிரேமலதா போட்டி?

இதனிடையே, ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில், “ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த அளவில் தற்போது நமது கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவரை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயகண்ணன் பேசியிருக்கிறார். இதன் மூலம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பிரேமலதா போட்டியிடும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
Published by:Arun
First published: