தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சி தானா? - திருமுருகன் காந்தி

கடந்த 30 ஆண்டுகளில் கோவை நகரம் மதவெறி மற்றும் தனியார்மயம் நோக்கி தள்ளப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார்..

Vijay R | news18
Updated: April 13, 2019, 10:12 PM IST
தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சி தானா? - திருமுருகன் காந்தி
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி
Vijay R | news18
Updated: April 13, 2019, 10:12 PM IST
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படாத நிலையில் தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சி தான் என நம்ப முடியவில்லை என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் ''தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம்'' பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய திருமுருகன் காந்தி, ”கடந்த 30 ஆண்டுகளில் கோவை நகரம் மதவெறி மற்றும் தனியார்மயம் நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இதுவே கோவை நகரின் சீரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. கோவை குண்டு வெடிப்புகளுக்கு பிறகு, நகரில் தமிழர்கள் அகற்றப்பட்டு வட மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். அரசியல் இல்லாமல் கலவரங்கள் நடப்பதில்லை” என குறிப்பிட்டார்.

தண்ணீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நகரை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக பேசிய திருமுருகன் காந்தி பாஜகவினர் விஞ்ஞானத்திற்கு நேர் எதிரானவர்கள் என்றும் விமர்சித்தார்.

Also Watch : தமிழ்-னா ஏளனம், இங்கிலீஸ்-னா கொண்டாட்டம் - சீமான் ஆவேசம்

First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...