தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை

கோப்புப் படம்

தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் படி 6 மாத சிறை தண்டனையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தீபாவளி நாளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  சுற்றுச்சூழல் மாசுகட்டுபாட்டுக்கு காரணமாக உள்ள பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தனர். எனினும் தீபாவளியின்போது, நாடு முழுவதும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பட்டாசுகளை ஆன்லைன் முறையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

  இந்நிலையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பலரும் எதிர்த்தனர். அதனால் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம்  ஒதுக்க கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், எந்த 2 மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று அறிவித்தது.

  இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் விதிகளை கடைபிடிப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் படி 6 மாத சிறை தண்டனையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: