நிலப்பிரச்சனைக்காக ரேடியோவை வெடிக்கச்செய்து தம்பியைக் கொன்ற அண்ணன்: சிக்கியது எப்படி?

மாதிரிப் படம்

சேலம் அருகே மின்சாதனம் போன்ற பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக நிலப்பிரச்னையில் அவரது அண்ணனே ரேடியோவில் டெட்டனேட்டர் வைத்து கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.

 • Share this:
  சேலம் அருகே மின்சாதனம் போன்ற பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக நிலப்பிரச்னையில் அவரது அண்ணனே ரேடியோவில் டெட்டனேட்டர் வைத்து கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.

  தும்பல்பட்டியை சேர்ந்த விவசாயி மணி, கடந்த 17-ஆம் தேதி சாலையோரம் கிடந்த எப்.எம் ரேடியோ போன்ற மின்சாதன பெட்டியை வீட்டிற்கு எடுத்து வந்து பரிசோதித்த போது திடீரென வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.

  அவரது பேத்தி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மணியின் சகோதரர் செங்கோடன் தற்கொலைக்கு முயன்றதால், சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

  Also read... மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர்

  அதில், செங்கோடன் நிலப்பிரச்னையில் தனது தம்பியை சதித்திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், எப்.எம் ரேடியோ வாங்கியதற்கான ரசீது மற்றும் நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையில் டெட்டனேட்டர்கள் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: