ஊட்டியில் ஆளுநர் தலைமையில் 2 நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், துணைவேந்தர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் தலைமையில் இரண்டு நாள் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் நேற்று துவங்கியது . இதில் தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற அனைத்து துணைவேந்தர்களின் மொபைல் போன்களும் மாநாட்டு அரங்கிற்கு செல்வதற்கு முன்பாகவே வாங்கி வைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்து மாலையில் வெளியே வரும்போதுதான் மீண்டும் மொபைல் போன்கள் துணை வேந்தர்களுக்கு தரப்பட்டுள்ளன.
கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களை யாரும் பதிவு செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று முயற்சியுடன் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளதாக ஏற்கனவே கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில், புதிய கல்விக் கொள்கை சார்ந்து மாநாட்டில் எடுத்துரைக்கப்படும் கருத்துக்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி மொபைல் போன்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.