• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐ.டி வேலையை விட்டு அரசியல் களத்தில் இறங்கிய இளம்பெண் - தி.நகர் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக புதிய பயணம்

ஐ.டி வேலையை விட்டு அரசியல் களத்தில் இறங்கிய இளம்பெண் - தி.நகர் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக புதிய பயணம்

நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரி

நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரி

ஐ.டி துறையில் கை நிறைய சம்பாதித்த வேலையை உதறிவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார் இளம்பெண். அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • Share this:
சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட வடபழனி பகுதியில் பெரும் ஆரவாரம் இல்லாமல், கூட்டம் இல்லாமல் எளிமையாக வீதி தோறும் நடந்துசென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் இளம்பெண் ஒருவர். யாரென்று அவரிடமே விசாரித்தபோது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நான் என்றார்.

திருச்சியை சேர்ந்த 33 வயதான சிவசங்கரி தான் இப்போது தியாகராய நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். அமைதியான குடும்பம், ஐடி துறையில் கை நிறைய சம்பளம், மகிழ்ச்சியான வாழ்க்கை. இவற்றையெல்லாம் விட்டு இப்போது பரபரப்பான அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் சிவசங்கரி.

அரசியலுக்கு நீங்கள் வர வேண்டிய காரணம் என்ன என்று கேட்டால் இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மீது பயங்கர கோபம், வெறுப்பு இருக்கிறது. எனவே ஒரு மாற்றத்தை நம்மைப் போன்ற இளைஞர்களால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார். இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது இளைஞர்களின் கையில் ஆட்சியும், அதிகாரமும் நிச்சயம் வந்து சேரும். பண பலமும் படைபலமும் மட்டுமே அரசியல் என்பதை தாண்டி மக்கள் நலன் சார்ந்த அரசியல் நிச்சயம் வந்தே தீரும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சிவசங்கரி.

காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்கிறார். வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் கவலையில்லை. அரசியலுக்கு வந்துவிட்டேன், இனிமேல் தொடர்ந்து அரசியலில் பயணிப்பேன். என்னைப்போன்ற இளைஞர்கள் பலரை அரசியலுக்கு கொண்டு வருவேன் என்று வார்த்தைகளில் நம்பிக்கை விதைகளைத் தூவுகிறார் சிவசங்கரி.
அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் சிவசங்கரி பல சிவசங்கரிகளுக்கான அடையாளமாகத் தெரிகிறார்.

அரசியல்வாதிகளை குறை சொல்லும் மக்களாய், ஓட்டு போடுவதற்கு கூட தயக்கம் காட்டும் நம்மில் பலருக்கு மத்தியில் சிவசங்கரி போன்றோர் நம்பிக்கை நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: